/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை -தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை -தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை -தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை -தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 21, 2025 03:08 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்த மழை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணை நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 14.8 மி.மீ., பெரியாறில் 21 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக இரைச்சல் பாலம் வழியாக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1634 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 114.45 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அதற்கு முன் நீர்ப்பிடிப்பில் மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் தண்ணீர் பற்றாக்குறையின்றி சாகுபடி செய்யமுடியும் என்பதால், மழை தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. நேற்று பகலில் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இரவில் தொடர்ந்தால் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.