/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் கண்ணாமூச்சி காட்டும் மழை
/
முல்லைப்பெரியாறு அணையில் கண்ணாமூச்சி காட்டும் மழை
ADDED : மார் 21, 2025 02:02 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மட்டும் கோடை மழை பெய்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 113.40 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 220 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு 311 கன அடி திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1459 மில்லியன் கன அடியாகும்.
கண்ணாமூச்சி காட்டும் மழை:
நீர்ப்பிடிப்பில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் மட்டும் கோடை மழை பெய்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று பெரியாறில் 10.2 மி.மீ., மழை பதிவானது. மார்ச் 12ல் 11.80 மி.மீ., மார்ச் 13ல் 8 மி.மீ.. மழை பெய்தது. மற்ற நாட்களில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவியது. தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும். ஆனால் கோடை மழை கண்ணாமூச்சி காட்டி வருவதால் நீர்மட்டம் உயருவதில் சிக்கல் நிலவுகிறது.