/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் மழை: ரோட்டோர நீர்வீழ்ச்சிகள் அதிகரிப்பு -சுற்றுலாப் பயணிகள் ஆனந்தம்

ADDED : ஜூலை 22, 2025 04:22 AM

கூடலுார்: கேரளா இடுக்கி மாவட்டத்தில் பெய்த மழையால் ரோட்டோரத்தில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கேரளாவில் மே 23ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை அவ்வப்போது தீவிரமடைந்து பெய்து வருகிறது.
இதனால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் ரோட்டோரங்களில் பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி பால் போல் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, பாம்பனாறு, பீர்மேடு, குட்டிக் கானம் வழியாக கோட்டயம் வரை செல்லும் ரோட்டில் பல இடங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன.
மழையால் பசுமையாக காட்சியளிக்கும் இடுக்கி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளும் காண்போரின் மனதை குளிர்வித்து வருகிறது. கனமழை நேரங்களில் தேக்கடி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் போது தற்காலிக நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை ஆறுதல் அடையச் செய்துள்ளது.