கட்டுமான பணிகளில் மழைநீர்சேகரிப்பு தொட்டிகள் 'மிஸ்சிங்'
கட்டுமான பணிகளில் மழைநீர்சேகரிப்பு தொட்டிகள் 'மிஸ்சிங்'
UPDATED : செப் 24, 2026 07:04 PM
ADDED : செப் 24, 2026 06:53 PM
தேனி:நகராட்சி பகுதியில் புதிய கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதை தவிர்ப்பதால் க நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிய துவங்கி உள்ளது.
தேனி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளைகிணறுகளில் நீர் இன்றி பலரும் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகரின் மீறுசமுத்திர கண்மாய், மந்தைகுளம் கண்மாய், ராஜவாய்க்கால், கொட்டக்குடி ஆறு என நீர் நிலைகள் இருந்தாலும் ஓராண்டாக போதிய மழை இல்லாததால் நகர் முழுவதும் நிலத்தடி நீர் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், '15 ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது பெயர் அளவில் மட்டும் அந்த விதிமுறை பின்பற்ற படுகிறது. இதனால் வீடுகளில் விழும் மழைநீர் நேரடியாக சாக்கடைகளுக்கு செல்கிறது. இதனை தவிர்க்க மீண்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முறையை தீவிரப்படுத்த வேண்டும். புதிய கட்டுமானப்பணிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டாயமாக்க வேண்டும் என்றனர்.
