ADDED : செப் 24, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.25–ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர்களுக்கு தேனியில் பயிற்சி வகுப்புநடந்து. குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி தலைமை வகித்தார். தாய்சேய் நல அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஹேமலதா உள்ளிட்டோர் பயிற்சி வழங்கினர்.
பயிற்சியில் குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட தரவுகளை இணையத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிந்து தகவல் தெரிவித்தல், வீடுகளுக்கு சென்று குழந்தைகள் பராமரிப்பு பற்றி தாய்மார்களுக்கு விளக்குவது உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது.
