/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை ; இடுக்கி அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : நவ 24, 2025 06:35 AM
மூணாறு: பதினான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வண்டிப்பெரியாறு தங்கமலை எஸ்டேட் தொழிலாளி ஜானுக்கு 23, இருபத்தி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, இடுக்கி மாவட்ட அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறில் தங்கமலை எஸ்டேட் உள்ளது.
இங்கு பணிபுரியும் ஜான் 14 வயது சிறுமியை 2023ல் டிச.,25 மற்றும் 2024 புத்தாண்டு நாளில் ஆகிய நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வண்டிப் பெரியாறு போலீசார் வழக்குப் பதிந்து, ஜானிடம் பீர்மேடு டி.எஸ்.பி., விஷால் ஜான்சன் விசாரித்து, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இடுக்கி அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில் 21 தடயங்கள் தாக்கல் செய்யப்பட்டு, 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி ஜானுக்கு 23 ஆண்டுகள் சிறை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி மஞ்சு உத்தரவிட்டார்.