sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரிய வகை 'பருந்து கழுகு' பலி

/

அரிய வகை 'பருந்து கழுகு' பலி

அரிய வகை 'பருந்து கழுகு' பலி

அரிய வகை 'பருந்து கழுகு' பலி


ADDED : அக் 08, 2025 07:15 AM

Google News

ADDED : அக் 08, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : அரிய வகை பருந்து கழுகு (Hawk Eagle) நேற்று முன்தினம் கம்பத்தில் உயர் அழுத்த மின் ஒயரில் சிக்கி உயிரிழந்தது. கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நேற்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

வனப்பகுதிகளில் இறந்து கிடக்கும் வன உயிரினங்களின் உடல்களை சாப்பிட்டு அதை சுத்தம் செய்யும் பணியை பருந்துகள் செய்கின்றன. அதே சமயம் குடியிருப்பு பகுதியில் இறந்த பிராணிகள் உடல்களை சாப்பிடும் குணம் கொண்டது கழுகுகள். இந்த இரண்டின் குணங்களையும் ஒருங்கே இணையப் பெற்றது தான் பருந்து கழுகு ஆகும். நேற்று முன்தினம் கம்பம் மணி கட்டி ஆலமரம் பகுதியில் உயர் அழுத்த மின் ஒயரில் சிக்கி பருந்து கழுகு இறந்து கிடந்ததை, கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் கைப்பற்றி வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தார். மாலை 5:00 மணிக்கு மேல் ஆனதால், உடற்கூராய்வு மேற்கொள்ளவில்லை. நேற்று காலை கம்பம் கால்நடை டாக்டர் செல்வம் உடற்கூராய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: வயதான பறவை தான். 3 கிலோ வரை எடை உள்ளது. கால்கள், இறக்கையில் மின்சாரம் பாய்ந்ததால் இறந்துள்ளது. கேரளாவில் இருந்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

நமது பகுதியில் இது போன்ற பருந்து கழுகை பார்த்ததில்லை.'', என்றார். அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் இந்த வகை பறவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகை பறவைகளை இயற்கை துப்புரவாளர் ( Nature Scavan ture) என்றும் அழைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us