/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எலி காய்ச்சல்: பத்து பேர் பாதிப்பு
/
எலி காய்ச்சல்: பத்து பேர் பாதிப்பு
ADDED : ஜூலை 11, 2025 03:14 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் எலி காய்ச்சல் பரவுவதால் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதாரதுறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இம்மாவட்டத்தில் மழைகால தொற்று நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரதுறையினர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கைபடி மாவட்டத்தில் 10 பேர் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. தேவியாறு காலனி 5, குமுளி, வாழ தோப்பு, நெடுங்கண்டம், அய்யப்பன் கோவில், உப்புதரா ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என பத்து பேர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் எலி காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண்ணில் சிகப்பு, மஞ்சள் நிறம், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவு, மஞ்சள், சிகப்பு நிறத்தில் சிறுநீர் ஆகியவை நோய்அறிகுறியாகும்.