ADDED : ஜூலை 17, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே பாறைகடவு பகுதியைச் சேர்ந்த சுஜித் 36, எலிக்காய்ச்சல் பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் ரத்த பரிசோதனையில் எலிக்காய்ச்சல் என தெரியவந்தது. அதற்கு கட்டப்பனை, ஆலுவா ஆகிய பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது தீவிரமடைவதும் பின்னர் குறைவதும் என அடிக்கடி தட்ப வெப்ப நிலை மாறி வருகிறது. அதனால் வைரல் காய்ச்சல், எலிக்காய்ச்சல், மஞ்சள் காமாலை உட்பட பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடதக்கது.