/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை இருதரப்பு மனுவால் குழப்பம்
/
தேனியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை இருதரப்பு மனுவால் குழப்பம்
தேனியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை இருதரப்பு மனுவால் குழப்பம்
தேனியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை இருதரப்பு மனுவால் குழப்பம்
ADDED : ஏப் 16, 2025 08:32 AM

தேனி : தேனி சுப்பன்செட்டி தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ரேஷன் கடை இது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இருதரப்பினர் மனுவால் கூட்டுறவுத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.
தேனி நகராட்சி 30வது வார்டில் சுப்பன்செட்டி தெரு உள்ளது. இந்த தெருவில் வசிப்பவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க போக்குவரத்து நெரிசலை கடந்து வாரச்சந்தை அருகே உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இப்பகுதியினருக்காக 2013ல் அப்போதைய எம்.பி., ஆருண் தொகுதி மேம்பாட்டு நிதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. கடை கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை திறக்க வில்லை.
இந்நிலையில் ஓராண்டிற்கு முன் திறப்பு விழாவிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்இணைப்பு பெறப்பட்டது.
பின் 2024 அக்.,ல் திறக்க பணிகள் நடந்தது. ஆனால், அந்த பணி அப்படியே நின்றது. மின் இணைப்பிற்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை அடிப்படை கட்டணம் ரூ.450 செலுத்தப்பட்டு வருகிறது.
ராஜவாய்க்கால் கிளை வாய்க்கால் என புகார்இது பற்றி கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், அந்த கடையை இதுவரை கூட்டுறவுத்துறைக்கு நகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. மேலும் அந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் கொண்டு செல்ல பாதை வசதி இல்லை.
மேலும் அந்த கடை ராஜவாய்க்கால் கிளை வாய்க்கால் மேல் அமைந்துள்ளதால் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என ஒரு தரப்பினர் மனு அளித்துள்ளனர். பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒரு தரப்பினர் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த கட்டடம் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் உறுதி தன்மை சோதிக்க வேண்டும். என்றனர்.

