ADDED : நவ 13, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி நகராட்சி முதலாவது வார்டு புதூரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், 6வது வார்டு உழவர் சந்தை ரோடு, 9வது வார்டு புதுக்காலனி, 24 வது வார்டு குலாலர்பாளையம் பகுதியில் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த கட்டடங்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தார். நகராட்சி கமிஷனர் சுதா, பொறியாளர் குணசேகர், கவுன்சிலர்கள் ஜெகநாதன், கலைச்செல்வி, மணிகண்டன், தாரண்யா, கலைவாணி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு போடி நகர செயலாளர் பழனிராஜ், நகர அவைத் தலைவர் மணிகண்டன், போடி தொகுதி செயலாளர் ஜெயராம் பாண்டியன், நிர்வாகி சுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

