/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2025 12:54 AM

தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் தேனி மாவட்ட ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை ஏற்படுத்தவேண்டும்.
குழு காப்பீட்டுத் தொகையினை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயல் தலைவர் பிச்சைமணி தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சேதுராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
தொடக்க வேளாண் ஊழியர்கள் சங்க மாநிலத்துணைத் தலைவர் தண்டபாணி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் பேசினர். ஏராளமான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதன்பின் நிர்வாகிகள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நர்மதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

