/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாகன வாடகையை கூட்டுறவு சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை
/
வாகன வாடகையை கூட்டுறவு சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை
வாகன வாடகையை கூட்டுறவு சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை
வாகன வாடகையை கூட்டுறவு சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 24, 2025 02:48 AM
தேனி: 'தாயுமானவர்' திட்டத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வாடகையை கூட்டுறவு சங்கங்களில் இருந்து நேரடியாக வாகன உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.'' என, ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் தாயுமானவர் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்படி 140 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை பணியாளர் வினியோகம் செய்கிறார். மாதத்திற்கு இரு நாட்களில் இந்த திட்டத்தில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், வீடுகளுக்கு செல்லும் நாட்களில் பலர் வீடுகளில் இருப்பது இல்லை. அவர்கள் வழங்கியுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடிவதும் இல்லை என்பன உள்ளிட்ட பல நிர்வாக சிரமங்கள் நிலவுவதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.
ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது: இத்திட்டத்தில் கிராமங்களில் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.40, நகர் பகுதியில் ரூ. 60 வழங்கப்படுகிறது. தினமும் 70 வீதம் இருநாட்களில் வழங்கி முடிக்க அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், பொருட்கள் வழங்க செல்லும் நாட்களில் பலர் வீடுகளில் இருப்பது இல்லை. சிலர் இறந்துவிட்டனர். சிலர் வேறு ஊர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பொருட்கள் வினியோகத்திற்கு எடுத்து செல்லும் வாகனத்திற்கு ரூ.1700 முதல் ரூ.2 ஆயிரம் வரை வாடகை வழங்க வேண்டிய உள்ளது. வினியோகிக்கும் ரேஷன்கார்டுகளை ஒப்பிடுகையில் இது கூடுதல் தொகையாக உள்ளது. இதனால் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்து வாகன வாடகையை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெருக்கடி தருவதை அதிகாரிகள் கைவிட வேண்டும்., என்றனர்.

