ADDED : ஜன 27, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளாவில் ரேஷன் வியாபாரிகள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கடைகளை அடைக்கப்போவதாக அறிவித்தனர். அது தொடர்பாக நிதி அமைச்சர் பால கோபால், உணவு வழங்கல்துறை அமைச்சர் அனில் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் ரேஷன் வியாபாரிகள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதனால் வியாபாரிகள் இன்று  முதல் ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளனர்.
மாநிலத்தில் 94.82 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் ஜனவரியில் இதுவரை 59.41 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்  பொருட்களை பெற்றுள்ளனர். எஞ்சிய 35.41 லட்சம் பேர் பொருட்கள் வாங்கவில்லை. இதனிடையே ரேஷன் பொருட்களை கடைகளுக்கு ஒப்பந்த அடைப்படையில் வினியோகம் செய்யும், லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

