/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறந்த ஊராட்சி தேர்வு பட்டியலில் ராயப்பன்பட்டிக்கு இடம்
/
சிறந்த ஊராட்சி தேர்வு பட்டியலில் ராயப்பன்பட்டிக்கு இடம்
சிறந்த ஊராட்சி தேர்வு பட்டியலில் ராயப்பன்பட்டிக்கு இடம்
சிறந்த ஊராட்சி தேர்வு பட்டியலில் ராயப்பன்பட்டிக்கு இடம்
ADDED : டிச 26, 2024 05:34 AM
தேனி: சிறந்த ஊராட்சிக்கான தேர்வு பட்டியலில் ராயப்பன்பட்டி இடம் பெற்றுள்ளது.
சென்னை நீங்கலாக 37 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
அதில் தேர்வாகும் ஊராட்சிக்கு 2023--- 2024க்கான சிறந்த ஊராட்சி என அறிவித்து முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடக்கும் விழாவில் ரூ.15 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்க உள்ளார்.
இதற்காக தேர்வாகும் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை முழுவதும் அமைத்திருக்க வேண்டும்.
அவை தற்போது முழு சுகாதாரத்துடன் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
பள்ளி, அங்கன்வாடி, அரசு அலுவலகங்களில் கழிப்பறைகள் சுகாதாரமாக பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பை சேகரித்து குப்பை இல்லாமல் சுற்றுப்புற சூழல் அமைந்திருக்க வேண்டும். சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் முறையாக சுகாதார முறையில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இதில் தேர்வாகும் ஊராட்சி அறிவித்து அரசு விருது வழங்கப்படும்.
இந்த அடிப்படையில் உத்தமபாளையம் ஒன்றியம், ராயப்பன்பட்டி ஊராட்சி தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான ஆய்வுக்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்ய உள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

