/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரியல் எஸ்டேட் முகவர்கள்ஆலோசனை கூட்டம்
/
ரியல் எஸ்டேட் முகவர்கள்ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 17, 2025 11:49 PM
தேனி: தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆலோசனை கூட்டம் லட்சுமிபுரத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயமுருகேஷ் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்டப் பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், தேனி ஒன்றிய செயலாளர் ராம்பிரசாத் வரவேற்றார். ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் முத்துசெந்தில்குமார் பேசினார். பொது மக்களை பாதிக்கும் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க வேண்டும். பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தாமதம் இன்றி பட்டா வழங்கிட வேண்டும் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி நகரச் செயலாளர் வையாபுரி, பொருளாளர் ரவிக்குமார், துணைத் தலைவர் நாகேந்திரன் உட்பட பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேனி நகரத் தலைவர் குமார் நன்றி தெரிவித்தார்.