/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பரிந்துரை
/
உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பரிந்துரை
உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பரிந்துரை
உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பரிந்துரை
ADDED : ஏப் 30, 2025 06:46 AM
தேனி; உத்தமபாளையம், ஆண்டிபட்டி பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆய்வு செய்ய குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை பிரிவிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
கழிவு நீர் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படுகின்றன. பாதாள சாக்கடைகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி நகராட்சிகள், பழனிசெட்டிபட்டி, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது உத்தமபாளையம், ஆண்டிபட்டி பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள கோரி குடிநீர் வடிகால் வாரியம் பாதாள சாக்கடை பிரிவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'இரு பேரூராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ள கோரி கடிதம் அனுப்பி உள்ளோம். பேரூராட்சிகள் ஆய்வுக் கட்டணம் செலுத்தியதும் ஆய்வுப்பணிகள் துவங்கும்.' என்றனர்.