/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
270 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
/
270 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
ADDED : ஆக 24, 2025 03:59 AM
தேனி: தேனி நகர்பகுதியில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கிய 270 பேர் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் மது குடித்து விட்டு டூவீலர், வாகனங்கள் ஓட்டுபவர்கள், வாகனங்களின் ஆவணங்கள் இன்றியும், கவனக்குறைவாக வாகனங்கள் இயக்குபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சிலரை பலமுறை எச்சரித்தாலும் மீண்டும் மது அருந்தி வாகனங்கள் ஓட்டுவதை தொடர்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக விதிமீறி வாகனங்கள் இயக்கிய சுமார் 270 ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தேனி போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.