/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண் அரிமானத்தை தடுக்க 14 தடுப்பணைகள் கட்ட அரசுக்கு பரிந்துரை
/
மண் அரிமானத்தை தடுக்க 14 தடுப்பணைகள் கட்ட அரசுக்கு பரிந்துரை
மண் அரிமானத்தை தடுக்க 14 தடுப்பணைகள் கட்ட அரசுக்கு பரிந்துரை
மண் அரிமானத்தை தடுக்க 14 தடுப்பணைகள் கட்ட அரசுக்கு பரிந்துரை
ADDED : அக் 03, 2024 06:28 AM
தேனி:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்தில் நீர் நிலைகளில் மண் அரிப்பை தடுக்க 14 இடங்களில் தடுப்பணைகள்கட்டுவதற்காக ரூ.2.14 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்து வேளாண் பொறியியல் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள், நீர் வழித்தடங்களில் மண் அரிமானத்தால் வண்டல் மண் சுவடுகள் இல்லாத அளவிற்கு,மழையில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் கரைகள் சேதமடைந்து விளை நிலங்கள் பாதிக்கின்றன. எனவே, மண் அரிமானத்தை தடுக்க வேண்டும் என விவசாயிகள், மாவட்ட நிர்வாகம், வேளாண் பொறியியல் துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். மாவட்ட நிர்வாகம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் அருகில் உள்ள பனசலாறில் திறன் மிக்க வண்டல் மண் தடுப்பணையை கட்டியது. இது நல்ல பலனை தந்துள்ளது. விவசாயிகள் இதுபோன்று வரட்டாறு, கொட்டக்குடி ஆறு, பாம்பாறு, முருகமலை பகுதிகள், தேவாரம் பகுதிகளில் உள்ள சிறு ஓடைகளின் அடிவாரத்தில் வண்டல் மண் அரிமானத்தை தடுக்கும் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என கோரிஇருந்தனர்.
வண்டல் மண் அரிமானத்தை தடுக்கும் தடுப்பணைகளை பெரியகுளம் சில்வார்பட்டி முருகமலை பகுதி, பாம்பாறு நீர்வரத்து ஓடை வரட்டாறு பகுதியில் 2 இடங்களிலும் அமைக்க விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகம், வேளாண் பொறியியல் துறைக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்று நடப்பு நிதியாண்டில் 14 தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், கலெக்டர் வழிகாட்டுதலில் விவசாயிகளின் கண்காணிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும் என வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ் தெரிவித்தார்.

