/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் கட்டட அனுமதி பெறுவதை எளிதாக்க அரசுக்கு பரிந்துரை 1100 சர்வே எண்களில் வசிப்பவர்கள் பயன் பெறுவர்

ADDED : ஆக 14, 2025 02:54 AM
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் கட்டட அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில் தொடர் கட்டுமான பகுதிகள் என அறிவிக்க கோரி மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளனர்.
தேனி நகராட்சிக்குட்பட்ட அல்லிநகரம், தேனி பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், வணிக கட்டடங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டுமான அனுமதி பெறுவதில் சிரமம் நிலவி வந்தது. அரசு விதிமுறைகளின் படி இப்பகுதியில் உள்ள சர்வே எண்களுக்கு அனுமதி வழங்க முடியவில்லை. இதனால் பலரும் கட்டுமான அனுமதி பெறமுடியாமல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட சுமார் 1100 சர்வே எண்களில் உள்ள கட்டடங்கள் தொடர் கட்டுமான பகுதி என அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி நகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: அல்லிநகரத்தில் பெரும்பாலான கட்டடங்கள் பொதுச்சுவர் வைத்துள்ளனர். பல இடங்களில் வீடுகள் அகலம் 15அடி, நீளம் 25 அடி என உள்ளன. இவர்கள் கட்டுமான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, அருகில் உள்ள சர்வே இடங்களுக்கு இடையே தலா ஒரு மீட்டர் (அனைத்துபுறமும் 3 அடி) இடைவெளி விட வேண்டும். 15அகலத்தில் இருபுறம் தலா 3 அடி இடைவெளி விடும் போது அந்த கட்டட அனுமதி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்க இந்த பகுதிகளை தொடர் குடியிருப்பு பகுதியாக அரசு அறிவிக்க நகர் ஊரமைப்புத்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்ப உள்ளோம்.
அரசு 'தொடர் குடியிருப்பு பகுதி'யாக அறிவித்தால் கட்டட அனுமதி பெறுவதில் சில தளர்வுகள் பெற முடியும்.
இதன் மூலம் தேனி நகர்பகுதியில் சுமார் 1100 சர்வே எண்களில் வசிப்பவர்கள் பயனடைவர். அதனால் கட்டட அனுமதி பெறுவதில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். மாவட்டத்தில் ஏற்கனவே போடி நகராட்சியில் சில பகுதிகள் தொடர் குடியிருப்புபகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் என்றனர்.