ADDED : பிப் 15, 2024 06:17 AM
தேனி: மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 17 ஆண்கள், 8 பெண்கள் என 25 காலிப்பணியிடங்களுக்கும், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்த 20 வயது பூர்த்தி அடைந்த சமூக சேவையில் ஆர்வம் உள்ள ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.' என தேனி எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
தேனி எஸ்.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் இன்று பிப் 15ல் விண்ணப்பம் பெறப்படும். விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பிப்., 17 மாலை 5:00 மணிக்கு நேரில் வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முதல் தளம், தேனி என்ற முகவரியிட்டு வழங்க வேண்டும். தகுதியானர்கள் தேர்வு செய்து, 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளித்து பின் பணியில் அமர்த்தப்படுவர். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

