/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி
/
ஏமாற்றிய 'ரெட் அலர்ட்' மக்கள் நிம்மதி
ADDED : ஆக 06, 2025 08:47 AM

மூணாறு : இடுக்கியில் நேற்று ' 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இம்மாவட்டத்திற்கு நேற்று அதிதீவிர கன மழைக்கான 'ரெட் அலர்ட்'டை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதனால் அனைத்து துறையினரும் உஷார் படுத்தப்பட்டு மழையை எதிர்கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்தது. ஆனால் 'ரெட் அலர்ட்' க்கு ஏற்ப மழை பெய்யவில்லை.
குறிப்பாக மூணாறு, பூப்பாறை, ராஜாக்காடு, உடும்பன்சோலை, நெடுங்கண்டம் உட்பட மலையோர பகுதியில் மழை கூடுதலாக செய்வது வழக்கம்.
அதற்கு மாறாக நேற்று மாலை 6:00 வரை மலையோர பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் தாழ்வான பகுதியான தொடுபுழாவில் மழை கொட்டித் தீர்த்தது.
மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்யும் மூணாறில் சாரல் மழை பெய்த நிலையில், அவ்வப்போது வெயில் முகமும் தென்பட்டது.
மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ' ரெட் அலர்ட்' டால் பாதிப்புகளுக்கு அஞ்சிய மக்கள் அதற்கு ஏற்ப மழை பெய்யாததால் நிம்மதி அடைந்தனர்.