/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேவை குறைபாடுகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிவாரணம்
/
சேவை குறைபாடுகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிவாரணம்
சேவை குறைபாடுகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிவாரணம்
சேவை குறைபாடுகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிவாரணம்
ADDED : அக் 26, 2025 04:14 AM

உத்தமபாளையம்: எந்தெந்த துறைகளின் சேவை குறைபாடுகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம் என நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்கள் தங்கள் தெருவில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ரஜினி, நடவடிக்கை எடுக்க பெரியகுளம் பி.டி.ஓ., மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டார். அந்த பணிகளை முடித்து புகைப்படத்துடன் பெரியகுளம் பி.டி. ஒ ராகவன் தலைமையிலான ஊரக வளர்ச்சி துறையினர் மாவட்ட நீதிபதியிடம் விபரங்களை சமர்ப்பித்தனர்.
இது குறித்து உத்தமபாளையத்தில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி கூறியதாவது: பொதுமக்கள் இது போன்ற சேவை குறைபாடுகளை மக்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து, தபால், தந்தி இதர தொலை தொடர்பு சேவைகள், காப்பீடு, மின்சாரம், குடிநீர் சேவை, மருத்துவமனை, மருந்தக சேவைகள், கல்வி நிறுவனங்கள் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை உள்ளிட்ட சேவை குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம்.
வெறும் தாளில் எழுதி தாக்கல் செய்யலாம். ரூ.ஒரு கோடி வரை உத்தரவு பிறப்பிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
பொதுமக்கள் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி சேவை குறைபாடுகளுக்கு நிவாரணம் பெறலாம், என்றார்.

