/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவை குறையுங்கள்! கம்பம் பள்ளத்தாக்கில் கேள்விக்குறியாகும் முதல்போகம்

ADDED : மார் 15, 2024 06:36 AM

கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்பில் ஆரம்பித்து பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும். ஆரம்பத்தில் கம்பம் பள்ளத்தாக்கு மட்டும் இருந்தது. பின்னர் பாசன பரப்பு விரிவுபடுத்தப்பட்டது. எனவே அணையின் தண்ணீரை பகிர்வதில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு இரு போக சாகுபடிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று ஆயக்கட்டு விதிகள் உள்ளதாகவும்,அதனைநடைமுறைப்படுத்த வேண்டும் என கம்பம் விவசாயிகள் கூறுகின்றனர்.
அணையில் 119.35 அடி நீர் உள்ளது. அணைக்கு 122 கன அடி வரத்து உள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு 822 கன அடி விடுவிக்கப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக விவசாயம் முடிவிற்கு வந்துள்ள நிலையில் வரும் ஜுன் முதல் தேதியில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர்வளத்துறையினர் தேவையே இல்லாமல் 822 கன அடி தண்ணீரை வைகைக்கு கொண்டு செல்கின்றனர்.
வைகை அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் வைகை அணையின் நீர் மட்டம் 65.39 அடியாக உள்ளது. (அணையின் முழு கொள்ளவு 71அடி). வைகை அணையில் போதிய அளவு நீர் மட்டம் உள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து ஏன் தண்ணீரை எடுக்கப்படுகிறது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்கின் முதல் போக சாகுபடி கேள்விக்குறியாகும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் தர்வேஷ் முகைதீன், சின்னமனூர் தலைவர் ராஜா , கருங்கட்டான்குளம் தலைவர் விஜயராஜன், கம்பம் தலைவர் நாராயணன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை உடனே குறைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.