/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
/
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 26, 2024 02:47 AM
ஆண்டிபட்டி :   வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் வைகை அணை நீர்மட்டம் தற்போது 64.30 அடியாக உயர்ந்துள்ளது. அணை உயரம் 71 அடி. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிசம்பர்18ல்  வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. டிசம்பர் 20ல் வினாடிக்கு 1630 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம், டிசம்பர் 22ல் வினாடிக்கு 1430 கன அடியாகவும், நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1272 கன அடியாக இருந்தது.

