/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; நீர்மட்டம் குறைவதால் நடவடிக்கை
/
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; நீர்மட்டம் குறைவதால் நடவடிக்கை
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; நீர்மட்டம் குறைவதால் நடவடிக்கை
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு; நீர்மட்டம் குறைவதால் நடவடிக்கை
ADDED : அக் 21, 2024 12:46 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 833 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை குறைவால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் மட்டும் 11.4 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 326 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2556 மில்லியன் கன அடியாகும்.
மழை குறைவால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்ததைத் தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவையும் குறைக்க வலியுறுத்தினர். இந்நிலையில் 900 கன அடியாக இருந்த நீர்த்திறப்பை நேற்று காலை 6:00 மணியில் இருந்து நீர்வளத்துறையினர் 833 கன அடியாக குறைத்தனர்.
கேரள இடுக்கி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கனமழை பெய்து நீர்மட்டம் உயரும் வரை தமிழகப் பகுதிக்கு திறந்துவிடும் நீரின் அளவை மேலும் குறைக்க வேண்டும். முதல் போக நெல் அறுவடை முடிவுக்கு வரும் நிலையில் தற்போது தண்ணீர் தேவை குறைவாக இருந்தாலே போதுமானது என விவசாயிகள் தெரிவித்தனர்.