/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வட்டார கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்
/
வட்டார கலைத்திருவிழா போட்டிகள் துவக்கம்
ADDED : அக் 14, 2025 04:25 AM

தேனி: மாவட்டத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவங்கி உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
கல்வித்துறை சார்பில் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் குறுவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுவோர் வட்டார போட்டியில் பங்கேற்கின்றனர். தேனி வட்டார அளவிலான போட்டிகள் நேற்று துவங்கியது.
அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையம், பெரியகுளம் ரோடு பி.சி., கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது. ஓவியம், பேச்சு, தனிநபர் நடிப்பு, கிராமியநடனம், பரதம், களிமண் சிற்பம் செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இன்று 9ம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது.
வட்டார போட்டிகள் அக்., 16 வரை நடக்கிறது. போட்டிகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் ஒருங்கிணைத்தனர்.