/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாமூல் வசூல் கேரளாவிற்கு கனிமம் ஏற்றிசெல்லும் வாகனங்களை மிரட்டி புதுக்கோட்டை கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
/
மாமூல் வசூல் கேரளாவிற்கு கனிமம் ஏற்றிசெல்லும் வாகனங்களை மிரட்டி புதுக்கோட்டை கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
மாமூல் வசூல் கேரளாவிற்கு கனிமம் ஏற்றிசெல்லும் வாகனங்களை மிரட்டி புதுக்கோட்டை கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
மாமூல் வசூல் கேரளாவிற்கு கனிமம் ஏற்றிசெல்லும் வாகனங்களை மிரட்டி புதுக்கோட்டை கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
ADDED : அக் 14, 2025 04:25 AM
தேனி: தேனி மாவட்டம், கம்பம் மெட்டு ரோடு வழியாக கேரளாவிற்கு கனிமம் ஏற்றிசெல்லும் வாகனங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல் மிரட்டி மாமூல் வசூலிக்கின்றனர். இவர்கள் மீது உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி தகராறு வழக்குப்பதிவு செய்தும் அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் இருந்து கேரளா செல்ல குமுளி,கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச்சாவடிகள் உள்ளன. கேரள மாநிலத்திற்கு டிப்பர், லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுவதை வருவாய்த்துறையினர், போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்ட ஒரு கும்பல் கம்பம் மெட்டில் ஒரு 'டென்ட்' அமைத்து, அந்த வழியாக கேரளாவிற்கு கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளிடம் ஒரு டிரிப் செல்ல ரூ.1500 வீதம் மாமூல் வசூலிக்கின்றனர். கனரக வாகனத்திற்கு தொகை அளவும் மாறுபடும். இந்த அடாவடி வசூல் அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் நடந்து வருகிறது. சட்டத்தை மீறி மாமுல் வசூலிப்பதை போலீசார், வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டும் காணாபோல் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கும்பல் மிரட்டல் விடுக்கின்றனர்.
இதனை சமீபத்தில் கண்டித்து விசாரித்த கம்பம் போலீசாருக்கு காரில் வந்த ‛டிப்டாப்'நபர் இது மேலிட விவகாரம் மிரட்டி பேசிக் கொண்டிருந்த நிலையில் சோதனை செய்த அதிகாரியின் அலைபேசிக்கு மூத்த அதிகாரி ‛வாகனத்தை விட்டுத் தொலைச்சிடுங்க' எனக்கூற சோதனைக்கு சென்ற அனைத்து அதிகாரிகளும் பின்வாங்கினர்.
இரு நாட்களுக்கு முன் தேனி அன்னஞ்சி ரோட்டில் நடந்த வாகன தணிக்கையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கனிமவளம் ஏற்றப்பட்ட லாரியை பிடித்து அபராதம் விதிக்க முற்பட்டார். அடுத்த 10 நிமிடங்களில் காரில் வந்த அதே புதுக்கோட்டை நபர், வீட்ருங்க சார் எனக்கூற, தி.மு.க., புள்ளியின் நேர்முக உதவியாளரிடம் இருந்து அதிகாரிக்கு ‛எதுவும் செய்ய வேண்டாம்'என, அலைபேசியில் உத்தரவு வர, அந்த அதிகாரி அதிர்ச்சியில் உறைந்தார். பாதிக்கப்பட்ட அதிகாரிகள் கூறியதாவது: கனிமவளம் கடத்தலை தடுக்க வேண்டிய அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இப் பிரச்னையில் துணிச்சலாக செயல்படும் அதிகாரிகளை சோதனையில் ஈடுபடுத்தி விதிமீறி வசூலிக்கும் கும்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
இது பற்றி உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமதுவிடம் கேட்ட போது, 'இப் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.