/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் அம்மச்சியாபுரம் ஊராட்சியில் குடிநீர் இன்றி பரிதவிப்பு
/
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் அம்மச்சியாபுரம் ஊராட்சியில் குடிநீர் இன்றி பரிதவிப்பு
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் அம்மச்சியாபுரம் ஊராட்சியில் குடிநீர் இன்றி பரிதவிப்பு
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் அம்மச்சியாபுரம் ஊராட்சியில் குடிநீர் இன்றி பரிதவிப்பு
ADDED : அக் 14, 2025 04:24 AM

தேனி: ஆண்டிபட்டி தாலுகா, அம்மச்சியாபுரம் ஊராட்சியில் உள்ள ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் வைகை ஆற்றிற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு தேங்கி உள்ளது. அடிப்படை வசதிஇன்றியும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊராட்சியில் 8 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியின் மேற்கு பகுதியில் மூலவைகை ஆறு ஓடுகிறது. ஆனாலும் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
பலர் ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. கிராமத்தின் மையப்பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது.
இது தெற்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள வயல்கள், கிணறுகளில் தண்ணீர் நிறையும் போது இந்த வாயக்கால் வழியாக வைகை ஆற்றிற்கு உபரி நீர் செல்லும் வகையில் அமைந்திருந்தது.
ஆனால், தற்போது பல இடங்களில் இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குப்பை கொட்டும் இடமாக ராஜவாய்க்கால் மாறி உள்ளது.
ராஜவாய்க்காலை குறிப்பிட்ட தொகையில் துார்வாரியதாக செலவு கணக்கில் எழுதி கடந்த கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகள் கணக்கு தெரிவித்துள்ளனர். தவிர பல இடங்களில் சாக்கடை துார்வாரப் படாமல் தேங்கி உள்ளது.
காட்சிப்பொருளான மேல்நிலை தொட்டி மணிக ண்டன், அம்மச்சியாபுரம்: பல பகுதிகளில் ஊராட்சி சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3வது வார்டு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை.
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மற்ற தெருக்கள், ஆழ்துளை கிணற்று நீரை குடிநீராக நம்பி உள்ளது. ஆற்றுப்பாலம் அருகே சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் தண்ணீர் இன்றி பயன்பாடுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பலரும் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.
ஊராட் சியில் தண்ணீர் வழங்குவதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதி இன்றி கூடுதல் செலவு ஆசைதம்பி, ஓய்வு ஊழியர், அம்மச்சியாபுரம்: அம்மச்சியாபுரத்தில் இருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கும், வேலைக்காக பலரும் தேனிக்கு தினமும் சென்று வருகின்றனர்.
ஆனால், அரசு சார்பில் காலை, மாலை ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. அதுவும் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பலரும் ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் 8 முறை அரசு பஸ் ஊருக்கு இயக்கப் பட்டது.
அது தற்போது 2 முறை மட்டும் இயக்கப்படுகிறது. இது தவிர ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுமருந்து தெளிப்பதில்லை. சில நாட்களாக பலரும் காய்ச்சல் பாதிப்பிற்கு உள்ளாகி வரு கின்றனர்.
ரேஷன் கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அரசு கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.