/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
/
கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கொலையானவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ADDED : நவ 13, 2025 12:18 AM
சின்னமனூர்: சீலையம்பட்டி நெல் களத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட விவசாயி பால்பாண்டி 60, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த பால்பாண்டி நேற்று முன்தினம் அதிகாலையில் மர்ம நபர்களால் சீலையம்பட்டி நெல் களத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நேற்று முன்தினம் மதியம் பிரேத பரிசோதனை முடிந்த பின், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகம் சென்று போராட்டம் நடத்தினார்கள்.
கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி சென்றனர். நேற்று இரவு போலீசார் தீவிர முயற்சியில் பால்பாண்டியின் மனைவி, மகன்களை சமாதானம் செய்து உடலை வாங்க சம்மதிக்க வைத்தனர். அதன் பேரில் நேற்று காலை பால்பாண்டியின் உடலை பெற்றுக் கொண்டனர்.
3 பேர்களிடம் தீவிர விசாரணை இக் கொலை தொடர்பாக சின்னமனுாரை சேர்ந்த 3 பேர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

