/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலரில் சால்வை சிக்கி பெண் பலி
/
டூவீலரில் சால்வை சிக்கி பெண் பலி
ADDED : நவ 13, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை பட்டாப்புளி பேட்டைத்தெருவைச் சேர்ந்த ஜமால் மனைவி ஷாஜாதி பீவி 60.
வடகரை பேட்டைத்தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா 35, டூவீலரில் அத்தையான ஷாஜாதிபீவியை தேனிக்கு அழைத்துச் சென்றார்.
டூவீலரை அஜாக்கிரதையாக ஓட்டி சென்றுள்ளார். லட்சுமிபுரம் தனியார் பள்ளி அருகே டூவீலரில் சால்வை சிக்கியதில் ஷாஜாதிபீவி, நிலை தடுமாறி விழுந்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டாக்டர் அவரை பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

