ADDED : நவ 13, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கருப்பையா தலைமையில் நிர்வாகிகள் டி.ஆர்.ஓ., ராஜகுமாரிடம் மனு அளித்தனர்.மனுவில், 'மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புபணி சரிவர நடக்கவில்லை.
கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 5ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அலுவலர் குறைதீர் முகாமை சரிவர நடத்துவதில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.

