/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : நவ 13, 2024 07:14 AM
கம்பம் : சண்முகாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக நேற்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகா நதி அணைக்கு மேகமலை பத்துக்கூடு என்ற இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அணை நிரம்பும். அணையின் மொத்த கொள்ளளவு 52.5 அடியாகும். இதில் 26 அடி வரை நீரை பயன்படுத்தலாம். அதன்பின் நீர் திறப்பது நிறுத்தப்படும். தற்போது அணை நிரம்பி 10 நாட்களாகிறது.
ராயப்பன்பட்டி , ஆனைமலையன்பட்டி சின்னஒவுலாபுரம், எரசை, கன்னி சேர்வைபட்டி, அழகாபுரி , வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 1640 ஏக்கர் புன்செய நிலக்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.
நேரடி பாசன வசதியளிக்காவிட்டாலும் , கிணறுகள், கண்மாய்கள் , குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். கடந்தாண்டு டிச. 8 ல் திறக்கப்பட்டு மார்ச் 24 வரை தண்ணீர் விநியோகம் நடந்தது. அதிகபட்சமாக 102 நாட்கள் வரை தண்ணீர் வழங்கப்பட்டது.
இந்தாண்டு நேற்று காலை சண்முகா நதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார். டி.ஆர்.ஓ. ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் இருந்தனர். விநாடிக்கு 14.47 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

