/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் 20 சதவீதம் பேர் நீக்கம் ...: விதிகளுக்கு புறம்பாக பயன்பெற்றவர்கள் கண்டுபிடிப்பு

ADDED : ஜூலை 19, 2025 11:54 PM

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டம் 2019 பிப்ரவரி முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக மொத்தம் ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இத் திட்டத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இத் திட்டத்தில் பயனாளிகளின் ஆதார், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவுடன் அவர்களின் முழு தகவல்களும் அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
அவ்வாறு கண்காணிப்பு செய்ததில் அரசு வேலை பார்ப்பவர், வருமான வரி கட்டுபவர், ஒரே வீட்டில் இரு பயனாளிகள், கவுரவ நிதி பெற்றதும், இறந்து போனவர்கள் பெயரில் பெற்று வந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திட்ட பயனாளிகள் 20 சதவீதம் பேர்களுக்கு ஊக்க தொகை நிறுத்தப்பட்டு விட்டது.
ஒரு வட்டாரத்திற்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் விவசாயிகள் ஊக்கத் தொகை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் 20 சதவீதம் பேர்கள், அதாவது 800 பேர் விதிகளுக்கு புறம்பாக பெறுவது கண்டறியப்பபட்டு, அவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் 2019 க்கு பின் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த திட்டத்தில் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் கூறுகையில், விதிகளுக்கு புறம்பாக ஊக்கத் தொகை பெற்ற 20 சதவீதம் பேர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆதார் இணைப்பு, -மற்றும் இ.கே.ஒய்.சி. (Electronic know your Customer) பதிவுகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு நீக்கப்பட்ட்டனர். 2019 க்கு பின் புதிய விண்ணப்பங்களுக்கு இது வரை அனுமதி இல்லை. விதிமுறைகளுக்குட்பட்ட சிறு குறு விவசாயிகளுக்கு எந்த நடையின்றி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்றனர்.