/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பென்னிகுவிக் மணிமண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் அகற்றம்
/
பென்னிகுவிக் மணிமண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் அகற்றம்
பென்னிகுவிக் மணிமண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் அகற்றம்
பென்னிகுவிக் மணிமண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் அகற்றம்
ADDED : ஜன 04, 2026 06:06 AM
கூடலுார்: லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் வளாகத்தைச் சுற்றிலும் கிடந்த குப்பை, மது பாட்டில்களை சோலைக்குள் கூடல் அமைப்பினர் அகற்றினர்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளான ஜனவரி 15ல் அரசு சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் மணிமண்டபத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மணிமண்டப வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் விட்டுச்சென்ற ஏராளமான குப்பை, அப்பகுதியில் குடிமகன்கள் விட்டுச் சென்ற மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.
தென் தமிழக மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிய மனிதக்கடவுளின் மணிமண்டபத்தில் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் குப்பையை ஆங்காங்கே வீசாமல் குப்பை தொட்டியில் போட வலியுறுத்தப்பட்டது.

