ADDED : ஜன 04, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வெங்கடாசலபுரம் ஸ்ரீவரதவேங்கட ரமண மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது.
பள்ளி ஸ்ரீவர வேங்கடரமண வித்யாலயா சபை செயலாளர் அனந்தகுமார் முகாமை துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சரவணன் உள்ளட்டோர் விழாவில் பங்கேற்றனர். மாணவர்கள் வெங்கடாசலபுரத்தில் ஆலயங்களில் துாய்மை பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மூணாறு மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சி பெற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் வெங்கடேசன் முகாமை ஒருங்கிணைத்தார்.

