/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5ல் நடக்கிறது
/
ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5ல் நடக்கிறது
ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5ல் நடக்கிறது
ரெங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5ல் நடக்கிறது
ADDED : ஜூன் 03, 2025 12:53 AM
தேனி: தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் கம்மவார் நாயுடு சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் ஜூன் 5ல் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு முதற்கால பூஜைகள் இன்று மாலை 6:00 மணிக்கு துவங்குகிறது.
இரண்டாம் கால பூஜைகள் நாளை காலை 8:30 மணிக்கு காயத்ரி ஹோமம், மண்டல கும்ப பூஜையுடன் துவங்க உள்ளது. தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. மாலையில் ஸ்வாமி விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால பூஜைகள் நாளை மாலையும், ஜூன் 5ல் காலை 6:30 மணிக்கு நடக்கிறது. கோயில் கும்பாபிஷேகம் அன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி, குழும தலைவர் (நிர்வாகம்) வீமினி நாச்சியார் மேற்பார்வையில் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.