/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை மீண்டும் திறப்பு
/
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை மீண்டும் திறப்பு
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை மீண்டும் திறப்பு
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை மீண்டும் திறப்பு
ADDED : நவ 06, 2024 02:28 AM
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்கு பின் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு செப்., 15 முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாச நிலங்களில் முதல் போகத்திற்கு ஜூலை 3 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையின் நீர் இருப்பு மற்றும் தண்ணீர் தேவையை பொறுத்து அணையிலிருந்து அவ்வப்போது திறக்கப்படும் நீரின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அக்., 30ல் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டது.
நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் அணையில் இருந்து கால்வாய் வழியாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு வைகை அணை நீர்மட்டம் 64.34 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2273 கன அடி.
அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.