ADDED : நவ 27, 2025 06:01 AM

மூணாறு: மூணாறு நகரில் தபால் அலுவலகம் சந்திப்பில் சேதமடைந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் சீரமைத்தனர்.
அந்த இரும்பு பாலம் ஆங்கிலேயர் காலத்தில் ராணுவத்தினர் அமைக்கும் 'பெய்லி' மாதிரியில் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த பாலத்தின் இரும்புகள் துருபிடித்து பலம் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அதன் அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு இரும்பு பாலம் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாலத்தின் நடுவில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முன் வராததால், ஆபத்தாக காணப்பட்டது. அதனால் பாதுகாப்பு கருதி பாலத்தில் போக்குவரத்தை தடை செய்யுமாறு மூணாறு போலீசார், தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர். அதன்படி பாலத்தில் அக்.31 முதல் போக்குவரத்தை தடை செய்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் பாலம் சீரமைக்கப்பட்டது.

