/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவி செல்லும் இணைப்பு ரோடு சீரமைப்பு
/
கும்பக்கரை அருவி செல்லும் இணைப்பு ரோடு சீரமைப்பு
ADDED : பிப் 04, 2024 03:28 AM

பெரியகுளம் : பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி சுற்றுலா பகுதியாக உள்ளது.
இதற்கு பெரியகுளத்திலிருந்து எ.புதுக்கோட்டை வழியாகவும், ஸ்டேட் பேங்க் காலனி, பெருமாள்புரம் இணைப்பு ரோடு வழியாக கும்பக்கரை அருவிக்கு செல்லலாம். முதல்வர் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கீழ வடகரை ஊராட்சி, ஸ்டேட் பேங்க் காலனி நுழைவு முதல் கீழவடகரை ஊராட்சி அலுவலகம் (பெருமாள்புரம்) வரை 700 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்திற்கு ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப் பணியனை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் சேகர், ஊராட்சி தலைவர் செல்வராணி மேற்பார்வையிட்டனர்.