/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அல்லிநகரம் கிராமத்தை இரு வருவாய் கிராமமாக பிரிக்க முடிவு அரசுக்கு அறிக்கை அனுப்பிவைப்பு

ADDED : ஏப் 30, 2025 06:57 AM
தேனி; தேனி அல்லிநகரம் வருவாய் கிராமத்தை இரு வருவாய் கிராமங்களாக பிரிக்க அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சி 22.23 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. நகராட்சி முழுவதும் அல்லிநகரம் என ஒரே வருவாய் கிரமமாக உள்ளது. நகராட்சியில் 33 வார்டுகளில் 30,500க்கும் மேற்பட்ட வீடுகள், 150க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. சர்வே எண்கள், ஆவணங்கள் அனைத்தும் அல்லிநகரம் கிராமம் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. இந்நகரம் மாவட்ட தலைநகராகவும், மாவட்டத்தில் உள்ள சில பெரிய வருவாய் கிராமங்களில் அல்லிநகரமும் ஒன்றாகும். இந்த வருவாய் கிராமத்தினை அல்லிநகரம் வடக்கு, அல்லிநகரம் தெற்கு என இரு வருவாய் கிராமங்களாக பிரிக்க அறிக்கை அரசுக்கு அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அல்லிநகரம் சர்வே வார்டுகளாக ஏ.பி.சி.டி.இ. எப். என பரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.பி.சி., என்பதை அல்லிநகரம் வடக்கு, டி.இ.எப்., சர்வே வார்டுகளை அல்லிநகரம் தெற்கு என இரு வருவாய்கிரமங்களாக பிரிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் அலுவலகம் மூலம் அரசுக்கு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.