/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 28, 2024 04:24 AM
தேனி : குடியரசு தின விழாவையொட்டி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடடினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சபைத் தலைவர் சீனிவாசன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்றார். சபை பொருளாளர் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் அனந்தகுமார் காந்தி சிலைக்கு மரியாதை செய்தார். பள்ளிக்குழுத் தலைவர் சத்ய ஆனந்தசீலன், செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பள்ளிக்குழு உறுப்பினர்கள் சக்தியன், சுப்புராஜ், லட்சுமணன் பங்கேற்றனர். தேசிய, மாநில ஹாக்கி, குத்துச் சண்டை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சபை நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சபை பொருளாளர், பள்ளிக்குழு உறுப்பினர் சுப்புராஜ் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் கொடியேற்றினார். கைலாசபட்டி திரவியம் மகளிர் கல்லூரியில் தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். தாமரைக்குளம் மின்துறை உதவி பொறியாளர் ஜெயகரன் கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் பட்டம்மாள், நிர்வாக அதிகாரி செந்தாமரை கண்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் கொடியேற்றினார். பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராம்சங்கர் கொடியேற்றினார். குடியரசு தின அணிவகுப்பு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வடுகபட்டி ஸ்ரீ மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜாராம் தலைமை வகித்தார்.
ஆசிரியர் சுப்புராஜன் கொடியேற்றினார். எண்டப்புளி ஸ்ரீ மார்க்கண்டேயா ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியை முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சின்னப்பாண்டியன் கொடியேற்றினார்.
நிர்மலா நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமை வகித்தார். பள்ளி செயலர் ஜோசப்மணி கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கீதா, செல்வக்குமார், முருக பாண்டி பங்கேற்றனர். 1330 திருக்குறள் ஒப்புவித்த மாணவி கனிஷ்கா ஸ்ரீ க்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியர் நந்தகோபால் நன்றி கூறினார்.
புத்தர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேணுகோபால் கொடியேற்றினார். ஆசிரியர் அன்புச் செழியன் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
சேக்கிழார் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகி தாமோதரன் கொடியேற்றினார். ஆசிரியை விசாலாட்சி நன்றி கூறினார்.
பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாளாளர் முத்துமாணிக்கம் கொடியேற்றினார். மூத்த ஆசிரியை தேவப்ரியா மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஆசிரியர் பாண்டீஸ்வரன் நன்றி கூறினார்.
பெரியகுளம் பி.டி.ராஜன் நினைவு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் லட்சுமணராஜா கொடியேற்றினார். ஆசிரியை பவானி மகேஸ்வரி இனிப்பு வழங்கினார். பெரியகுளம் நகராட்சி 10 ம் பகுதி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நக்கீரன் கொடியேற்றினார். பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு எஸ்.ஐ., அம்மாவாசை கொடியேற்றினார். போலீசார்கள் பங்கேற்றனர். தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் கொடியேற்றினார்.
வடகரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் கொடியேற்றினார். தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கொடியேற்றினார். ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., மணிகண்டன் கொடியேற்றினார். பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நிலைய அலுவலர் பழனி கொடியேற்றினார். தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
எண்டப்புளி ஊராட்சியில் தலைவர் சின்னபாண்டியன் கொடியேற்றினார். துணைத் தலைவர் கோகிலா, ஊராட்சி செயலர் பிச்சைமணி முன்னிலை வகித்தனர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கீழ வடரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி கொடியேற்றினார். துணைத் தலைவர் ராஜசேகரன், ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தனர். லட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி கொடியேற்றினார். துணை தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி செயலர் நந்தினி முன்னிலை வகித்தனர். வடபுதுப்பட்டி ஊராட்சியில் தலைவர் அன்னபிரகாஷ் கொடியேற்றினார். துணைத்தலைவர் பிரியா, ஊராட்சி செயலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். சருத்துபட்டி ஊராட்சியில் தலைவர் சாந்தி கொடியேற்றினார். ஊராட்சி செயலர் லெனின் பங்கேற்றனர்.
எருமலைநாயக்கன்பட்டியில் தலைவர் பால்ராஜ் கொடியேற்றினார். துணைத் தலைவர் சுசிலா, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தனர். சில்வார்பட்டி ஊராட்சியில் தலைவர் பரமசிவம் கொடியேற்றினார். துணைத்தலைவர் சுகந்தி, ஊராட்சி செயலர் வீரபத்திரன் முன்னிலை வகித்தனர். மேல்மங்கலம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ் கொடியேற்றினார். துணைத் தலைவர் பாண்டியன் ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். ஜெயமங்கலம் ஊராட்சியில் தலைவர் அங்கம்மா கொடியேற்றினார். துணைத் தலைவர் தேவி, ஊராட்சி செயலர் கோபால் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். குள்ளப்புரம் ஊராட்சியில் தலைவர் மஞ்சுளாதேவி கொடியேற்றினார். துணைத் தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சந்திரகலா முன்னிலையில் தலைமை அலுவலர் சியாகான் கொடியேற்றினார். அலுவலர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள் தூய்மை, துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் வேல்மணி கொடியேற்றினார். துணைத் தலைவர் மச்சக்காளை, வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.