ADDED : டிச 15, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கனமழை காரணமாக பாதுகாப்பு நலன் கருதி வாகன ஓட்டிகள் மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு தேனி கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை வலுவடைந்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழையால் குமுளி மலைப்பாதை, கம்ப மெட்டு, போடி மெட்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் மரம் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முடிந்த வரை இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.