/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கெங்குவார்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை
/
கெங்குவார்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை
கெங்குவார்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை
கெங்குவார்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2025 03:09 AM
தேவதானப்பட்டி : ''கெங்குவார்பட்டி பகுதியில் நிகழும் அசாதாரண சூழலை சமாளிக்க புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்'' என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரியகுளம் சப்-டிவிஷனில் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி உட்பட 4 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
தேவதானப்பட்டி ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்டு தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளான ஜி.கல்லுப்பட்டி, புஷ்பராணி நகர், திண்டுக்கல் மாவட்ட எல்லை வரையும் கொடைக்கானல் ரோடு, காமக்காபட்டி, ஏ.மீனாட்சிபுரம், ஸ்ரீ ராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில் இப்பகுதியில் ஜாதி மோதல், கோயில் திருவிழாவில் மோதல், கொலை, கொள்ளை, திருட்டு, மணல் திருட்டு, 24 மணி நேரம் மது விற்பனை என போலீசாருக்கு சவால் விடும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கெங்குவார்பட்டி பகுதியில் குற்றச்சம்பவங்கள் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 300 வழக்குகள் பதிவாகிறது. முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானல் செல்லும் ரோடு இப்பகுதியில் உள்ளது.
ஒன்றரை ஆண்டுக்கு முன் கெங்குவார்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் தயார் செய்தது. தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரியுள்ளனர்.