/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை
/
அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை
அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை
அரசமரத்துகுளம், சீதாகுளத்திற்கு 18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரிக்கை
ADDED : செப் 29, 2025 04:39 AM

போடி : ''போடி அருகே விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் கரிசல்குளம், சீதாகுளம், அரசமரத்துகுளம் கண்மாய்களுக்கு 18ம் கால்வாய் நீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.சிந்தலைச்சேரியில் அரசமரத்துகுளம் கண்மாயும், சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரத்தில் சீதாகுளம் கண்மாயும் உள்ளன. இக்கண்மாய்களில் நீர் நிரம்புவதன் மூலம் எஸ்.தர்மத்துப்பட்டி, சங்கராபுரம், கந்தசாமிபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன் பெறும். 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மறைமுகமான பாசன வசதி பெறும்.
18ம் கால்வாய் விவசாயிகள் சங்க நிர்வாகி பிரபு கூறியதாவது: முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து 18ம் கால்வாய்க்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட 18ம் கால்வாய் தண்ணீரானது பண்ணைப்புரம் கிழக்குப் பக்கம் உள்ள சங்கப்பன்குளம் கண்மாய் வரை மட்டுமே வந்தது. இக்கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி கரிசல்குளம் கண்மாய், டி.சிந்தலைச்சேரிக்கு உட்பட்ட அரசமரத்து குளம் கண்மாய், சங்கராபுரம் சீதாகுளம் கண்மாய்க்கு நீர் திறந்து விட வேண்டும்.
ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இக்கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் தக்காளி, கத்தரி விதைப்பு பணிகள் உட்பட பல்வேறு விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் கரிசல்குளம், அரசமரத்துகுளம், சீதாகுளம் கண்மாய், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்., என்றார்.