/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை பூச்சி விரட்டியான நொச்சி கன்றுகள் வழங்க கோரிக்கை
/
இயற்கை பூச்சி விரட்டியான நொச்சி கன்றுகள் வழங்க கோரிக்கை
இயற்கை பூச்சி விரட்டியான நொச்சி கன்றுகள் வழங்க கோரிக்கை
இயற்கை பூச்சி விரட்டியான நொச்சி கன்றுகள் வழங்க கோரிக்கை
ADDED : செப் 11, 2025 05:36 AM
கம்பம் : இயற்கை பூச்சி விரட்டியான நொச்சி கன்றுகளை தோட்டங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்வதால், வேலி போன்றும் பயன் தருவதால், விவசாயிகள் நொச்சி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலிப் பயிராக பயன்படுத்தப்படும் நொச்சி மருத்துவ குணம் கொண்ட பயிராகும். இயற்கை பூச்சி விரட்டியாகும். மேலும் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்கப் பயன்படுகிறது. நொச்சி வளர்ப்பதால் மண்ணின் வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்படும். சாகுபடி செய்துள்ள பயிர் நன்றாக வளரும். எனவே தோட்டங்களில் வரப்பு ஓரங்களில் நொச்சியை வளர்க்க இலவசமாக நொச்சி கன்றுகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2023 செப்டம்பரில் வேளாண் துறை அறிவித்தது.
ஒரு விவசாயிக்கு 60 கன்றுகள் வரை வழங்கப்பட்டது. முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டதால், தோட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று நடவு செய்தனர். கடந்தாண்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது. ஆனால், இந்தாண்டிற்கு உரிய அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
இதுகுறித்து கம்பம் வேளாண் துறையினர் கூறியதாவது: கடந்தாண்டு பெரியகுளம் தோட்டக்கலை பண்ணையில் இருந்து நாற்றுகள் வாங்கினோம்.
இந்தாண்டு கூடலுாரில் உள்ள வேளாண் துறையின் பண்ணையில் 20 ஆயிரம் நொச்சி கன்றுகள் வளர்க்கும் பணி துவங்கி உள்ளன.
நாற்றுகள் முழுமையாக வளர 3 மாதங்கள் ஆகும். வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் விவசாயிகளுக்கு நடப்பாண்டு உரிய ஒதுக்கீடுகள் விநியோகம் செய்யப்படும்., என்றனர்.