/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுக்கள் அதிக பால் சுரக்க உதவும் டானிக் மருந்தகங்கள் மூலம் வழங்க கோரிக்கை

ADDED : ஏப் 12, 2025 06:37 AM

கம்பம் : பசுக்கள் அதிக பால் சுரக்க உதவும் டானிக்கை கால்நடை மருந்தகங்கள் மூலம் வழங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் பல்கலை பசுக்களின் செரிமான திறனை அதிகரித்து, சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவை குறைக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராண்ட் மிக்ஸ் என்னும் டானிக்கை அறிமுகம் செய்தது.
இதனை உழவர் பயிற்சி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இது நல்ல பலனை தந்து, பால் உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் இந்த டானிக் கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்களில் கிடைப்பது இல்லை.
மாவட்டம் முழுவதும் இருந்து ஒரு இடத்தில் உள்ள உழவர் பயிற்சி மையத்திற்கு அனைவராலும் செல்ல முடியாது .
கால்நடை டாக்டர் கூறுகையில், 'வேளாண் பல்கலை கண்டுபிடித்த டானிக் பசுக்களுக்கு நல்ல பலனை தந்துள்ளது.
கால்நடை மருந்தகம், கிளை நிலையங்கள் மூலம் வழங்க அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,' என்றார்.