/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எழும்பூரில் இருந்து போடிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
/
எழும்பூரில் இருந்து போடிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
எழும்பூரில் இருந்து போடிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
எழும்பூரில் இருந்து போடிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 19, 2025 12:48 AM

தேனி; ''தேனி மாவட்டம் போடிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாக தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.'' என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிற்கு மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக ஞாயிறு, செவ்வாய், வியாழன் தோறும் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளியில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இயங்க துவங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டால் கேரள மாநிலம் சபரிமலை செல்லும் பக்தர்கள், மூணாறு, இடுக்கி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பயனடைவர்.
சிறப்பு ரயில் அவசியம் ரயில் பயணிகள் கூறியதாவது: தீபாவளி அக்.20ல் கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்காக சொந்த ஊர் செல்வதற்காக ரயில் புக்கிங் நேற்று முன்தினம் துவங்கியது. சென்னை எழும்பூரில் இருந்து போடிக்கு விருத்தாச்சலம், திருச்சி, மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் சென்னை, திருச்சியில் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் தேனி மாவட்ட மக்கள் சொந்த ஊர் வந்து செல்ல எளிதாக இருக்கும். மறுமார்க்கத்திலும் இந்த சிறப்பு ரயில் இயக்க வேண்டும்., என்றனர்.