/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி ஊராட்சிகளில் அமைக்க கோரிக்கை
/
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி ஊராட்சிகளில் அமைக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி ஊராட்சிகளில் அமைக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி ஊராட்சிகளில் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 19, 2025 04:53 AM
ஆண்டிபட்டி : மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைக்க ஊராட்சிகளில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவில் பல கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நாட்டு மாடுகள் அதிகம் உள்ளன.
ஆடுகள், மாடுகள் வளர்ப்பு தொழில் செய்பவர்கள் அன்றாடம் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் அவைகளை மொத்தமாக மேய்ச்சல் நிலங்களுக்கு பல கி.மீ., தூரம் ஓட்டிச் செல்கின்றனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள், நீர் நிலைகளை மேய்ச்சல் நேரத்தில் கால்நடைகளுக்கு தண்ணீர் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்வர். கடந்த சில வாரங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குளங்கள் கண்மாய்கள் நீர் வற்றி விட்டது. மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தண்ணீர் தேவைக்கு தவிக்கின்றன. கடந்த காலங்களில் சில ஊராட்சிகளில் சிறப்பு திட்டத்தில் போர்வெல் அமைத்து கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. தொடர்ச்சியான பராமரிப்பு இல்லை. மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் கால்நடைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கால்நடை அதிகம் வளர்ப்புள்ள பகுதிகளில் அவைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைத்து பராமரிக்க வேண்டும்.