/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சீரற்ற மின் வினியோகத்தால் பழுதாகும் மின்சாதனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : செப் 19, 2025 02:28 AM
தேனி: தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் சீரற்ற மின் வினியோகத்தில் மின் சாதனங்கள் பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
தேனி ஒன்றியம், ஸ்ரீரங்காபுரம் ஊராட்சி தெற்கு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த சில நாட்களாக சிரான மின் வினியோகம் இல்லை. மின் வினியோகத்தில் சில நேரம் கூடுதல் மின்சாரம், சில நேரம் குறைந்த மின் வினியோகம் ஆகிறது. இதனால் அப்பகு வீடுகளில் மின் மோட்டார், டிவி., ப்ரிஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாகி உள்ளன.
பொதுமக்கள் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன் இப்பிரச்னை தொடர்பாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு சரிசெய்வதாக கூறினர். ஆனால், இதுவரை மின்வினியோகம் சீராக வில்லை. இதனால் மின்சாதனங்கள் பழுது தொடர்கிறது. மின்வாரிய அதிகாரிகள் விரைவாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.